நெஞ்சம் பெண்டூலம் ஆகுமடி

| Tuesday, April 7, 2015
ஏன் இந்த பார்வைகள்
ஏன் இந்த மெளனங்கள்
நெஞ்சுக்குள் காற்றின்மை உண்டாக்குதோ

ஏன் இந்த வார்த்தைகள்
ஏன் இந்த வாசனை
நெஞ்சுக்குள் தீப்புயல் உண்டாக்குதோ

காதுகள் மூடும் போதினிலும் மூழைக்குள்
ஓடும் பாடல் ஒன்றாய்
உள்ளத்தை மூடி வைத்திருந்தேன்
நீ மட்டும் எப்படி உள்ளே சென்றாய்

என்ணூலும் நீ ஆனாய்
என் வானம் நீ ஆனாய்
காற்றாடி ஆனேனடி

ஏன் இந்த பார்வைகள்
ஏன் இந்த மெளனங்கள்
நெஞ்சுக்குள் காற்றின்மை உண்டாக்குதோ

வண்ணம் மாறாத ஓவியமாய்
என்னை அங்கங்கே காட்டுகிறாய்
ஈரம் காய்ந்தாலும் பத்திரமாய்
என் பின்பம் எங்கும் பூட்டுகிறாய்

பின்னே ஓடிடும் காட்சியல்லாம்
மின்னல் வேகத்தில் மாற்றுகிறாய்
கண்ணுக்குள் என்னை உள்ளிழுத்து
என் வாழ்வை புள்ளி ஆக்குகிறாய்

என்னை நான் காக்க வரைந்திருந்த
மாயக் கோடொன்றை நீக்குகிறாய்

இது மெய்யென்றோ பொய்யென்றோ
யோசிக்கும் முன் என் ஐயத்தைப் போக்குகிறாய்

தேவையில்லாத வெட்கமெல்லாம்
நேரம் பார்க்காமல் கொள்கிறேன்

நான் ஓர் ஆண் என்ற உண்மை கண்டு
அங்கே என்னை நான் கிள்ளுகிறேன்

காதல் நட்புக்கு மத்தியிலே
நெஞ்சம் பெண்டூலம் ஆகுமடி

ஒட்டும் தீண்டாமல் பேசயிலே
வினாடி நின்று ஓடுமடி

இன்னும் ஓரிரு நொடிகளிலே
முத்தம் நான் வைக்கக் கூடுமடா

ஒ கோ கோ
என்ன என்ன
குட்டைக்குள் உன் பின்பம் வாழத்தான் கண் ஒன்றை போட்டாயடா

ஏன் இந்த பார்வைகள்
ஏன் இந்த மெளனங்கள்
நெஞ்சுக்குள் காற்றின்மை உண்டாக்குதோ

ஏன் இந்த வார்த்தைகள்
ஏன் இந்த வாசனை
நெஞ்சுக்குள் தீப்புயல் உண்டாக்குதோ

காதுகள் மூடும் போதினிலும் மூழைக்குள்
ஓடும் பாடல் ஒன்றாய்

உள்ளத்தை மூடி வைத்திருந்தேன்
நீ மட்டும் எப்படி உள்ளே சென்றாய்

என்னுள்ளும் நீ ஆனாய்
என் வானம் நீ ஆனாய்
காற்றாடி ஆனேனடி

0 comments:

Post a Comment

Next Prev
▲Top▲